December 13th, 2006
by nilgiris
கலிகாலம் அடா கலிகாலம், இம் கலி முத்திப்போச்சு…
அந்தக் காலத்திலெல்லாம் அவாஅவா தொழிலை அவாஅவா பார்த்திண்டு ஜாதிசனங்களோட சேமமா இருந்தா,
இப்போ, பதகுத்தறிவு, என்னவோ மரியாத, உரிமை, அது இதுன்னுட்டு சாதியை ஒழிக்கிறனுட்டு நம்மவாவை குறிவைக்கிறா இதுல அரசாங்க சலுகை ஒரு கேடு. கோயிலுக்குள்ளும் அந்த.. வனுங்களுக்கு வேல.
நாலெத்து படிச்சதும் கம்பியூட்டர் குழுக்களாம் என்ன எழவோ என்ன காரியமோ ஆரம்பிச்சி தொலைக்கட்டும் அங்கேயும் நம்மவாளை குடையறுது
தான் ஜென்மசாபல்யமா நெனைக்கிறாங்க…
இன்னும் என்ன கூறுகின்றனர் என்பதை அவர்களின் அனாமேய பின்னுட்டங்கள் சாட்சியளிக்கும்.
குறிப்பிட்ட அந்த ஜாதியார்கள் அந்ததக் காலகட்டத்தில் எப்படிதொழிலைப் பிடித்துக் கொண்டனர் அப்டேட் ஆயினர் பாருங்களேன்
இரண்டு மூன்றாயிரம் ஆண்டிலிருந்தே துவங்குவோம்
ரிஷிகள்(சிலவிதி விலக்குகள் இருக்கலாம்)
கடவுளின் பிரதிநிதிகள்
குலகுருக்கள்
நூலாசிரியர்கள்
ஆச்சாரியார்கள்
ராஜதந்திரிகள்
மந்திரிகள்
துபாஸ்கள்
உபாத்தியார்கள்
வக்கீல்கள்
ரயில்வே உயர்அதிகாரிகள்
பள்ளி ஆசிரியர்கள்
இஞ்சினியர்கள்
சட்டவல்லுனர்கள்
டாக்டர்கள்
கணிணி நிபுணர்கள்
இன்னும் பல்துறைகளிலும் குறிப்பாக எந்தக்கட்சி ஆண்டாலும் நிழல்
அரசாங்கம் இவர்கள் தான்.
காதிலும், வாயிலும் புகைகிறதா ஏன்னிந்தப் பெறாமை என்பீர்கள்
இத்தனைத் துறைகளை எடுத்துக் கொண்டனரே அவர்களின் புரோகிதத்
தொழிலை யாருக்காவது விட்டுத்தந்தனரா?
கேட்டால் யாரும் அதற்குத் தகுதிவாய்ந்தவர் இல்லை என்பார்கள்.
சரி, ஒன்றுமே இல்லாத பூணூல் என்ன உடலோடு ஒட்டியாப் பிறந்தது
அதைப்பற்றி பேசிவிட்டால் தொலைந்தது குய்யோ முறையோ தான்..
அட அதன் மதிப்பை!!!! உணர்த்தி நியும் போட்டுக்க என்பது தானே?
எனக்கொரு சந்தேகம் குலத்தொழிலுடன் அவர்கள் நின்றிருந்தால் இன்றைய
பாரதம் எப்படி இருந்திருக்கும் யாராவது என் சந்தேகத்தைப் போக்கு வீர்களா?
Category Uncategorized |
No Comments →
December 13th, 2006
by nilgiris
அமைதி தவழும் இளைஞன், முகத்தில் ஞான ஒளி திகழ காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறான். துருவனாக இருக்க முடியாது, அர்ஜுனனாகவும் இருக்க வாய்ப்பில்லை.
ராஜ கலையோ, அம்சமோ இல்லை மார்பின் குறுக்கே புனிதம் வாய்ந்த
பூணூலும் இல்லை, ஆனால் அமைதியும் தேடியதைக்கண்ட பேரானந்தமும்
முகத்தில் புன்முறுவலுடன் தவழ்கிறது.
என்ன இது அந்தத்தலையைக் குறிவைத்து காற்றைக்கிழித்து மின்னலெனப்பாயுந்து வருகின்றதே ஒரு சரம்…
முகத்தில் புன்னகை மாற வில்லை ஆனால் தலை உடலுடன் இப்போது இல்லை..
வீர்ர்.. என தன் வேலையை முடித்துச் திரும்பிச் சொல்லும் சரத்தில் “ராமா” என பெயர் பொறித்துள்ளதே?!
ஆம் விசுவாமித்திரன் யாகத்தைக் காத்த,கும்பகர்ணன்,இராவணன் போன்ற கொடியவர்களின் உயிர் குடித்த ஸ்ரீராமபிரானின் அம்பு தான் அது.
ஏன் இந்த பாதகச் செயலைச் செய்தது அல்லது தப்பிப் பிழைத்த அரக்கர் யாராவது ஸ்ரீராமனின் புகழ் கெடுக்கச் செய்த சதியா?
இல்லை.
அயோத்தியில் அக்ரகாரத்தில் அற்ப ஆயுளில் ஒரு பிராமணச் சிறுவன் இறந்து விடுகிறான்
ஐயோ.. அப்படி நடக்கலாமா?
கொடுங்கோண்மைக்கு அடையாலம் அல்லவா அது.
ஆள்பவனோ ராஜாராமன்..
பிணத்தைத் தூக்கிக்கொண்டு ஆராய்ச்சி மணிஅடித்தார் பிராமணர்..
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மந்தகாசப் புன்னகையுடன் அசையாத மணி அசைந்த காரணத்தை ஞானத்தால் உணர்ந்தார்..
சமூகநீதி காக்க தன் கோதண்டத்தை வளைத்தார்…
பின் குறிப்பு: இளைய தவசி சம்புகன் சூத்திரன் அவன் தவம் செய்யலாமா?
தன் ஜாதிக்குறிய கொலை முதலிய ஒழுக்கத்தைக் கைவிடலாமா?
அதைப்பார்த்துக் கொண்டு மன்னன் சும்மா இருக்கலாமா?
மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில் எனக்குத் தெரியவில்லை.
துவாபாரத யுகத்தில்- சூத்திரன் தவம் செய்யலாமா?
கூடாது.
தன் ஜாதிக்குரிய கொலை முதலிய ஒழுக்கத்தைக்
கைவிடலாமா?
தவறு. அவன் தன் குலதர்மத்தை மீறினவன் ஆவான்
அதைப்பார்த்துக் கொண்டு மன்னன் சும்மா இருக்கலாமா?
தொடர்ந்து மன்னனாக இருக்கவேண்டுமானால் சும்மா இருக்கக்கூடாது. அவன் ராஜாராமனாகவே இருந்தாலும்.
ஆனால் இக்காலத்தில்????????
சாமதானத்தவர்கள் பதில் கூறுவார்களா?
Category Uncategorized |
2 Comments →
December 2nd, 2006
by nilgiris
வணக்கம் நல்வரவு
அடடாவின் பணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
கூறி என் முதல் பதிவை பதிக்கின்றேன்
வணக்கம் நன்றி…
ஈஸ்வர்
Category Uncategorized |
5 Comments →